in

நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

 

நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினம் என்பதால் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருக்காட்சி தந்த பெருமாள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு இங்கு உள்ள கல்யாண வெங்கட்ரமண பெருமாள் மூலவருக்கு அபிஷேகமும்.

பின்னர் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் காட்சி தந்தார்.

அப்போது துளசி மற்றும் வண்ண நறுமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்ட பின்மகாதீபம் காண்பிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் துளசியால் அர்ச்சனை செய்தப்பட்ட பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் இங்குள்ள சம்மேகன கோபாலனுக்கு முத்தங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார் அப்போது துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர். புரட்டாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினம் என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

What do you think?

புதுச்சேரியிலும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் ஓம் சக்தி சேகர் வலியுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம்