in

மீண்டும் ஒரு வழக்கில் சிக்கிய நயன்… பிரச்சனை விடாம துரத்துதே அம்மணியை

மீண்டும் ஒரு வழக்கில் சிக்கிய நயன்… பிரச்சனை விடாம துரத்துதே அம்மணியை

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், நிறுவனம் 2015 ஆம் ஆண்டு தயாரித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் நயன் ஆவணப்படத்தில் அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடர்ந்து ரூ.1 கோடி இழப்பீடு கோரியது.

அந்த வழக்கு இன்னும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில். நடிகை நயன்தாராவின் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படமான பியாண்ட் தி ஃபேரி டேல் (Beyond The Fairy Tale) மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் அனுமதி பெறாமல் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம் பெற்றதால் பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏபி இன்டர்நேஷனளுக்கு…. டார்க் ஸ்டுடியோஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்திரமுகி பட காட்சிகளை ஏற்கனவே நீக்கும்மாரு நோட்டீஸ் விடப்பட்டது ஆனால் இன்று வரை காட்சிகள் நீக்கப்படாததால்…..டார்க் ஸ்டுடியோஸ் கிளிப்களை நீக்கவும், சந்திரமுகி காட்சிகளை மேலும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், படத்தின் ஸ்ட்ரீமிங் மூலம் கிடைத்த லாபத்தின் கணக்கைச் சமர்ப்பிக்கவும் ஏபி இன்டர்நேஷனல் இப்போது நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளது…

இந்த பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையில் இன்று வரை நயன் தரப்பு பேச்சு வார்த்தை நடைபெறாததால் டார்க் ஸ்டுடியோ நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் விட வேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

What do you think?

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய தீபிகா

Vaishali Blessed with Boy Baby