ஊத்துக்காடு புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் 10 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 0.6.09. 2025 சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு திருக்கொடியானது ஆலயத்தில் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. அதன் மறுநாள் 07. 09. 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை திருப்பலி பூசை நடைபெற்றது.
அதன் மறுநாள் திங்கட்கிழமை 08.09. 2025 அன்று மாலை 8 மணிக்கு திருத்தேர் ஊர்வலமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருத்தேர் ஊர்வலமானது ஊத்துக்காடு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தது அதன் பின்பு திருத்தேர் ஆலயத்துக்கு வந்தவுடன் திருக்கொடையானது இறக்கப்பட்டது. இதில் 300 பெயர் கலைந்து கொண்டு மாதா அருளை பெற்றனர்.


