சிதம்பரத்தில் இயற்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் இயற்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டம், மரபணு திருத்த நெல் ரகங்களான கமலா, பூஜா, நெல் ரகங்களை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு எதிராக இயற்கை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் வடக்கு ரத வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இயற்கை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மரபணு திருத்தம் செய்த நெல் ரகங்களான கமலா, பூஜா, ரகங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் சோதனை செய்வதற்கு மனிதர்கள் என்ன எலியா எனவும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்து ஆதிக்கும் செய்யும் எனவும் மரபு விதைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுணி, காட்டுயானம், உள்ளிட்ட இயற்கை நெல் விதைகள் அழிந்து போகும் எனவும், மரபணு மாற்றம் செய்த பயிர்களை தமிழக அரசு அனுமதிக்க கூடாது எனவும் மரபணு மாற்றம் செய்த உணவுகளை சாப்பிடும் போது மனிதர்களுக்கு மூலக்கூறுகள் சிதைவடைந்து மலட்டுத்தன்மை உண்டாகும்.
மனித உறுப்புகள் சிதைந்து போகும் எனவும் கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள் தமிழ்நாடு அரசு மரபணு மாற்றம் செய்த பயிர்களுக்கு தமிழ்நாட்டில் தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.


