in

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி

 

கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திட.. தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர், பூம்புகார் விற்பனை நிலையத்தில், நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 4-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

இக்கண்காட்டசியில் களிமண், காகிதக்கூழ், மரம், பளிங்குத்தூள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட கொலு பொம்மைகள். அஷ்டலட்சுமி, தசாவதாரம், நவகிரகங்கள், சங்கீத மும்மூர்த்திகள், மைசூர் தசரா, கிரிக்கெட், மற்றும் பல்வேறு வகையான செட் பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை தமிழ்நாடு மட்டுமல்லாமல், ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியில் விற்கப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இந்த கண்காட்சி கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவும், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொம்மைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனை மூலம் ரூ.20 லட்சம் வருவாய் ஈட்ட பூம்புகார் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

What do you think?

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு பேரணி

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு