in

சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றிய திமுக

சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றிய திமுக

 

ஆறாவது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த கௌசல்யா வெங்கடேஷ் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு

திமுகவை சேர்ந்த கௌசல்யா வெங்கடேஷ் அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் வேட்பாளர்களாகபோட்டியிட்ட நிலையில் திமுக வேட்பாளர் கௌசல்யா வெங்கடேஷ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மீது கடந்த மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுமொத்தம் உள்ள நகரமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழந்தார் இந்த நிலையில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் பதவி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இன்று சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் சேம் கிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்றது

மொத்தம் உள்ள 30 நகர்மன்ற உறுப்பினர்களில் 28 பேர் தேர்தல் நடைபெறும் கூட்டரங்கில் இடம்பெற்றனர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் அவருக்கு ஆதரவாக வாக்களித்த திமுகவைச் சேர்ந்த 17 ஆவது வார்டு உறுப்பினர் விஜயகுமார் ஆகிய இருவரும் தேர்தலை புறக்கணித்த நிலையில்

மீதமுள்ள 28 உறுப்பினர்களை கொண்டு நகர்மன்ற தேர்தல் நடத்தும் பணிகள் துவங்கியது.

இதில் திமுக சார்பில் ஆறாவது வார்டு உறுப்பினர் கௌசல்யா அதிமுக சார்பில் 26 வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பமும் தேர்தலில் போட்டியிட வேட்ப மனு தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து நகர்மன்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் ஆனது நடைபெற்றது.

இதில் பதிவான 28 வாக்குகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 6 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட கௌசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

சங்கரன் கோவில் நகராட்சி நகரமன்ற தலைவர் பதவியை மீண்டும் திமுகவை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

இராமநாதபுரம் மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா