in

25 ஆண்டு காலமாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்

25 ஆண்டு காலமாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்

 

25 ஆண்டு காலமாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என வேதனை

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் ஊராட்சிக்குட்பட்ட அஜந்தா காட்டன், காட்டூரணி பகுதியில் கடந்த 25 வருடங்களாக அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு, இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருவதோடு.

பள்ளி செல்லும் மாணவர்கலும் கூட முறையான நேரத்திற்கு பள்ளி செல்ல முடியவில்லை எனவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் கூட அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட குண்டும் குழியுமாக இருக்கும் எங்கள் பகுதி சாலையின் வழியாக வர முடியவில்லை இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் விஷ ஜந்துக்களால் உயிருக்கு அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கைகள் இல்லாததால் இன்று மக்கள் குறை தீர் நாளில் மாவட்ட ஆட்சியிடம் தங்கள் பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதி செய்து தந்து மக்களின் அச்சத்தை போக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதி மக்கள் அடைந்து வரும் இன்னல்கள் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

What do you think?

செல்போனை திருடி சென்ற வாலிபர்-சிசிடிவி காட்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா