in

முதலை கடித்து மீன்பிடித் தொழிலாளி படுகாயம்

முதலை கடித்து மீன்பிடித் தொழிலாளி படுகாயம்

 

சித்தமல்லி அருகே கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடித்த உள்நாட்டு மீன்பிடித் தொழிலாளி முதலை கடித்து படுகாயம் மயிலாடுதுறை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(55). மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் ஆறுகளில் விசுறு வலை வீசி மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

ஜெயராமன் மணல்மேடு அடுத்த சித்தமல்லி அருகே திம்மாபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் விசுறு வலை வீசி மீன் பிடித்துள்ளார்.

அப்போது, ஆற்றில் சென்ற முதலை ஜெயராமனின் வலது கையை கடித்தது. இதில், படுகாயம் அடைந்த ஜெயராமன் முதலையிடம் இருந்து தப்பித்து கரையேறினார்.

பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, அவருக்கு கையில் 6க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், மணல்மேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்த விழிப்புணர்வு வாகன பேரணி

மின்விளக்குகள் இல்லாததால் இருண்டு கிடக்கும் கொள்ளிடம் பாலம்