in

மாநில அளவிலான சதுரங்க போட்டி

மாநில அளவிலான சதுரங்க போட்டி

 

மயிலாடுதுறை அருகே கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 370 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் ஏ ஆர் சி விஸ்வநாதன் கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி மயிலாடுதுறை அடுத்த சித்தர் காட்டில் நடைபெற்றது.

இதில் மாநில முழுவதும் இருந்து 370 பேர் பங்கேற்பு, ஒன்பது வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 11 வயதிற்கு கீழ் பட்டவர்கள் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் 15 வயது உட்பட்டவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஐந்து பிரிவுகளாக இந்த போட்டி நடைபெற்றது.

ஆறு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றது. ஆடவர் மற்றும் மகளிர் காண போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 15 இடங்களை பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுத் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

மயிலாடுதுறை மாவட்ட சதுரங்க கழக தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்ற போட்டியை மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் நடத்தி வைத்தார்.மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ்,
ஏ ஆர் சி விஸ்வநாதன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What do you think?

இளையனார்வேலூர் முருகர் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

சீர்காழி அருகே பழையாறு மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்