in

மயிலாடுதுறை ஸ்ரீ காத்தாயி அம்மன் வாழ் முனீஸ்வரன் கோயில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை ஸ்ரீ காத்தாயி அம்மன் வாழ் முனீஸ்வரன் கோயில் தீமிதி திருவிழா

 

மயிலாடுதுறை அருகே ஸ்ரீ காத்தாயி அம்மன் வாழ் முனீஸ்வரன் கோயில் தீமிதி திருவிழா விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காத்தாயி அம்மன், வாழ் முனீஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சுவாமி புறப்பாடு மற்றும் சந்தன காப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

பின்பு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து அலகு காவடிகள் மற்றும் சக்தி கரகம் ஆகியவை தீ மிதித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வாழ் முனீஸ்வரனுக்கு மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

What do you think?

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிழாக்கு பூஜை

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா