79வது சுதந்திர தினத்தை மேயர் தேசிய கொடி ஏற்றி மரியாதை
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
கொட்டும் மழையில் நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பாதியில் நிறுத்திய மாநகராட்சி ஆணையாளர்.மாணவிகளின் மனம் வாடக்கூடாது என்பதற்காக விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காலி செய்து கொடுத்து கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் மனம் போடாமல் நடத்துவதற்கு ஆணையாளர் செய்த சிறப்பு ஏற்பாடு.
79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது நெல்லை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா துணை மேயர் ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் கொட்டும் மழையில் மாணவ மாணவிகளின் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனை விஐபி அமரும் இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் ஆகியோர் மாணவிகள் மழையில் நனைவதை அறிந்து பாதியிலேயே கலை நிகழ்ச்சிகளை நிறுத்த அறிவுறுத்தினர்.

மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிக்காக பல்வேறு பயிற்சிகள் எடுத்திருந்த சூழலில் மாணவிகள் மனம் நோகக்கூடாது என்பதற்காக விஐபிகள் அமர்ந்த இடத்தை உடனடியாக காலி செய்து மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர் மாணவிகளுக்காக தாங்கள் அமர்ந்த இடங்களை அகற்றிவிட்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


