in

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு 5 மணி நேரமாக நடுவழியில் நின்ற ரயில்கள்

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு 5 மணி நேரமாக நடுவழியில் நின்ற ரயில்கள்

 

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு 5 மணி நேரமாக நடுவழியில் நின்ற ரயில்கள்: 5 மணி நேரத்திற்கு பின் அடுத்தடுத்து பாம்பன் பாலத்தை கடந்து சென்ற ரயில்கள்.

பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு ரயில்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக நடுவழியில் நின்றது. பின் கோளாறு சரி செய்யப்பட்டு ரயில்கள் அடுத்தடுத்து பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. ரயில் பயணிகள் சிலர் இறங்கி பேருந்தில் சென்றனர்.

பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழைய ரயில் பாலத்தில் முற்றிலுமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாம்பன் கடலில் பழைய பாலத்திற்கு அருகே ரூ.550 கோடி மதிப்பீட்டில் செங்குத்து தூக்கு பலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட அதிலிருந்து மையப்பகுதியில் அமைந்துள்ள செங்குத்து தூக்கு பலத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில் இன்று மதியம் பாம்பன் புதிய செங்குத்து தூக்குப்பாலத்தை மேலே தூக்கி இயக்கி ஆய்வு செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாலம் கீழே இறங்காததால் ரயில்வே துறை அதிகாரிகள் அதை நீண்ட நேரம் போராடி கீழே இறக்கி உள்ளனர்.

இருப்பினும் ரயில் தண்டவாளங்கள் செங்குத்து தூக்குபாலத்துடன் சரியாக இணையாமல் இருப்பதால் ராமேஸ்வரத்தில் இருந்து 2.40க்கு புறப்பட்ட மதுரை பயணிகள் ரயில் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட விரைவு ரயில் ஆகிய இரண்டு ரயில்களும் 5 மணி நேரத்திற்கு மேலாக பாம்பன் அடுத்த குந்துகால் பகுதியில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பல மணி நேரத்துக்கு மேலாக ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் உணவு இல்லாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ரயிலில் பயணித்த ஒரு சிலர் பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.

மேலும், பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் ரயில்வே துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வழியாக குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டது.


முதலில் தாம்பரம் விரைவு ரயில் கடந்து சென்றது அதை தொடர்ந்து சென்னை எழும்பூர் செல்லும் ராமேஸ்வரம் விரைவு புறப்பட்டு சென்றது. அடுத்ததாக மதுரை பயணிகள் ரயில் கடந்து சென்றது.

What do you think?

ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்