in

தேசிய பாதுகாப்பு படையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

தேசிய பாதுகாப்பு படையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

 

புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய பாதுகாப்பு படையுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது…

தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.இதற்கான நிகழ்ச்சி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இரு மாநில குற்றவாளிகளின் விவரங்கள், குற்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், போதைப் பொருள் கடத்தலை தடுப்பது, இது மாநில போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையுடன் புதுச்சேரி காவல்துறை புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

NSG என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையுடன் புதுச்சேரி காவல்துறை இணைந்து ரோந்து பணியை ஈடுபடுவது, புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி பெறுவது, காவல்துறையை மேம்படுத்துவது ஆகியவை ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அந்தமான், லட்சத்தீவை தொடர்ந்து புதுச்சேரி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் கையெழுத்திட உள்ளன.

What do you think?

வினாடி வினா தனிநபர் உலக சாதனை நிகழ்ச்சி

அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில் மஹாசங்கடஹர சதுா்த்தி கோலாகலம்