ஸ்ரீ ராகவேந்திரனின் 354 ஆம் ஆண்டு ஆராதனை விழா
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் உள்ள ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திரனின் 354 ஆம் ஆண்டு ஆராதனை விழா, கருங்குழி பிருந்தாவனத்தின் 31 ஆம் ஆண்டு விழா மற்றும் தவ யோகி ரகோத்தமா சுவாமிகளின் 12-வது ஆண்டு யோக பிரவேச விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி காலை 6.00 மணிக்கு பிருந்தாவன சித்தர் ரகோத்தமா இருந்த தனி அறையில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.
விழாவில் கோ பூஜை கணபதி ஹோமம்,நவகிரக ஹோமம்,லட்சுமி நரசிம்மர் ஹோமம்,ஆஞ்சநேயர் ஓமம்,ராகவேந்திரா சுவாமியின் மூலமந்திர ஹோமம் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆன்மீக பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது பகல் 12 மணிக்கு கருங்குழி பிருந்தாவனச் சித்தர் யோகி ரகோத்தமா ராகவேந்திரா சுவாமிக்கு மகாதீபாரனை காண்பித்தார்.
இந்த விழாவில் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம். சி. சம்பத், முன்னாள் ஏ டி எஸ் பி ராஜேந்திரன், மதுராந்தகம் டி எஸ் பி மேகலா, வனத்துறை அலுவலர் ராஜசேகர்,அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருகச்சூர் ஆறுமுகம், பவுஞ்சூர் வெக்காளியம்மன் ஆலய ஸ்தாபகர் சுந்தரவரதன், அரியந்தாங்கல் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் மணிபாலன் சுவாமிகள், அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஸ்தாபகர் நவீன சுவாமிகள், வையாவூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதாஏழுமலை, தொழில் அதிபர் ராஜேந்திரன் சென்னை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தம அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன், நிர்வாக அறங்காவலர் துளசிங்கம் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


