மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள் அகற்றம்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள், முறையாக வாடகையை செலுத்தி கடந்த மார்ச் 31 வரை பயன் படுத்திக்கொண்டு, அதன்பிறகு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இக்கோயிலுக்கு சொந்தமான கடைகள் தெப்பக்குளம் டவுன் ஹால் ரோட்டில் உள்ளது. குளத்தைச் சுற்றி எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகள், சர்வீஸ் செய்வது உட்பட 99 கடைகள் உள்ளன.
இவை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. உரிமையாளர்கள் நீதிமன்றம், தீர்ப்பாயத்திற்கு சென்றனர்.

ஆனால் கோயில் நிர்வாகத்திற்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கோயில் நிர்வாகத்திடம் கடைகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததை எடுத்து இன்று காலை 9 மணி அளவில் கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புடன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


