விருத்தாசலம் அருகே தந்தை கண் முன்னே நான்கு வயது குழந்தை உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதில் மூத்த மகன் முகித் இரண்டாம் வகுப்பு அவரது சொந்த ஊரில் படித்து வருகிறார் இரண்டாவது மகன் ரோகித் புதுகூரப்பட்டையில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.
இதில் இரண்டாவது மகன் ரோஹித்தை தினந்தோறும் அவரது சொந்த ஆட்டோவில் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது வழக்கம் இந்த நிலையில் இன்று தனது ஊரிலிருந்து பள்ளிக்கு தனது ஆட்டோவில் அழைத்துக் கொண்டு போகும் போது திடிரென நாய் குறுக்கே வந்துள்ளது.
இதில் தந்தை முருகவேல் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே தலை குப்புற கவிழ்ந்தது இதில் நான்கு வயது குழந்தை ரோகித் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தந்தை கண்முன்னே நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தில் அழைத்துள்ளது.


