திருப்பதி ஏழுமலையான் கோவில் பவித்திர உற்சவம்
ஏழுமலையான் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்திர உற்சவம் துவக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான பவித்திர உற்சவம் இன்று துவங்கி நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது.
பவித்ர உற்சவத்தின் முதல் நாளான இன்று கோவிலில் உள்ள கல்யாண உற்சவம் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமிக்கு பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது..

தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் ஆகம விதிமுறைகளின் படி பவித்திர பிரதிஷ்டை செய்தனர்.
உற்சவத்தில் இரண்டாம் நாள் ஆன நாளை பவித்ரா ஆவாகனம் நாளை மறுநாள் பவித்திர பூர்ணாகுதி ஆகியவை நடைபெற உள்ளன.


