பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை திருஇந்தளூர் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பஞ்ச அரங்கச் சேத்திரங்களில் ஐந்தாவதுமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 ஆவது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்களில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.
ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பரிமளரெங்கநாயகி தாயார் சன்னதியில் பெண்கள் பங்கேற்ற 508 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

குத்து விளக்கை தயாராக பாவித்து சோடச உபசாரங்கள் செய்து குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி பெண்கள் வழிபாடு செய்தனர்.
இதன் மூலம் குடும்பத்தில் நன்மை ஏற்பட்டு தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களது நம்பிக்கையாகும். ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


