in

பாபநாசம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 4 வாலிபர்கள் கைது

பாபநாசம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 4 வாலிபர்கள் கைது

 

பாபநாசம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 4 வாலிபர்கள் கைது….

1 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள் ,ரூ8,500 ரொக்க பணம் , வெள்ளி செயின் உட்பட ரூ.50,000 மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் வேம்பகுடி, சோமேஸ்வரபுரம் உட்பட 5 இடங்களில் இருசக்கர வாகனத்தில் இரண்டு சிறார்கள் உட்பட நான்கு வாலிபர்கள் சாலையில் வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து கத்தியை கட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவுபடி பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு மேற்பார்வையில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீஸார்கள் தொடர் ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி 1 இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு சிறார்கள் உட்பட நான்கு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில் 5 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள், வெள்ளி செயின், ரூ.8,500 ரொக்க பணம் உட்பட ரூ. 50,000 மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்து அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் -வயது-19., திருவையாரைச் சேர்ந்த பாரத் வயது-21 ,மற்றும் திருவையாறை சேர்ந்த 2 சிறார்கள் உட்பட 4 பேர்களை கபிஸ்தலம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொடர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 சிறார்கள் உட்பட 4 பேரும் கபிஸ்தலம், அரியலூர், திருவையாறு, திருமானூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தூய்மை பணியாளர்களை கெளரவித்த வாடகை கார் ஓட்டுநர்கள்

கஜேந்திர புஷ்கரணி படிக்கட்டுகளில் அமர்ந்து சாமி தரிசனம்