மனு அளிக்க வந்து மகனை தொலைத்த தாய்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை மனு அளிக்க வந்து மகனை தொலைத்த தாய் சிறுவனை அரவணைத்து தாயிடம் ஒப்படைத்த பெண் நகராட்சி கமிஷனர்
குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக மனுக்களை ஆர்வமுடன் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகமான காரணத்தால் 3 வயது மகனை அவரது தாயை விட்டு தொலைந்த நிலையில் அழுதபடி நகராட்சி கமிஷனர் ராணி மற்றும் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் அமர்ந்த பகுதிக்கு அழுதபடி சுற்றி திரிந்து கொண்டிருந்தான்.
இதனை கண்ட நகராட்சி கமிஷனர் ராணி அந்த சிறுவனை தூக்கி அவரது தாய் எங்கென்று கேட்ட நிலையில் அந்த சிறுவனுக்கு சொல்ல தெரியாததால் தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததால் தாயுள்ளத்தோடு அந்த சிறுவனை தூக்கி மடியில் அமர வைத்து செல்போனை காண்பித்தும் அந்த சிறுவன் அழுகையை நிறுத்தாததால் மைக் மூலம் சிறுவனின் அடையாளங்களை கூறிய நிலையில் பதறி அடித்துக் கொண்டு அவரது தாய் ஓடி வந்து அவரது மகனை அழைத்துச் சென்றார்.
மகளிர் உரிமைத் தொகை பெற மனு அளிக்க வந்த இடத்தில் மகனை தொலைத்த நிலையில் தாயுள்ளத்தோடு மீட்டு தாயிடம் நகராட்சி பெண் கமிஷனர் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


