in

தமிழ்நாடு அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் இருந்து போக்குவரத்து துறைக்கு எந்த நிதியும் வழங்கப்படுவதில்லை என்றும் தமிழ்நாடு அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்ட போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர்.

இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் வருகின்ற மாதத்தில் 3,200 பேர் பணிக்கு எடுக்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை தமிழக அரசு தான் போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்குகிறது என்றார். மேலும் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான கேள்விக்கு அந்தத் துறை அமைச்சரை பதிலளிப்பார் எனக் கூறி கூறப்பட்டார்

What do you think?

பாக்யலக்ஷ்மி சீரியல் கிளைமாக்ஸ்…விரைவில்

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்