மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் இயக்குனர் பேட்டி
மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது- எம்ஜிஆர் காலம் தொட்டு அரசியல் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக மதுரை திகழ்ந்து வருகிறது – மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – 1980களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜென்ம நட்சத்திர திரைப்படத்தின் இயக்குனர்
பேட்டி
ஜென்ம நட்சத்திர திரைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில்
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் இருக்கக்கூடிய ரேடியன்ஸ் திரையரங்கிற்கு படக்குழுவினர் வருகை தந்தனர்
ஒரு நொடி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தமன் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படத்தை மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிவர்மன் இயக்கியுள்ளார்
இந்தப் படத்தில் மல்லி மல்கோத்ரா . காளி வெங்கட் தலைவாசல் விஜய் உட்பட ஏராளமானோர் நடித்திருக்க கூடிய நிலையில்
ஆங்கிலத்தில் வெளிவந்த ஓமன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஜென்ம நட்சத்திரம்
இந்த படத்தை தமிழ் ஆடியன்ஸ்க்கு பிடிப்பது போல எமோஷன்களுடன் கலந்த ஹாரர் படமாக படத்தை இயக்கி வழங்கியுள்ளார் இயக்குனர் மணிவர்மன்
தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து அவர்களோடு புகைப்படம் செல்பி உள்ளிட்டவைகளை எடுத்ததற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட குழுவினர் பேசுகையில்
படத்தின் கதாநாயகன் பேசுகையில் , அடிப்படையில் மதுரையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சென்னைக்கு புலம்பெயர்ந்த பிறகு நான் நடித்த திரைப்படம் வெளியாகி மதுரையில் ரசிகர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி
ஜென்ம நட்சத்திரம் பட குழுவினராக மதுரைக்கு வந்திருக்கிறோம் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றோம்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை வெளியிடப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது மக்கள் மத்தியில் கிடைத்திருக்கக்கூடிய வரவேற்பை பார்த்தவரை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது கோவையில் ஆரம்பித்து தற்போது இங்கு மதுரைக்கு வந்திருப்பது மதுரை ரசிகர்களை பார்த்து இருப்பது மகிழ்ச்சி
குறிப்பாக மதுரை மக்கள் அவர்களுக்கே உரித்ததான வழியில் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி
இயக்குனர் மணிவருமன் மிகச் சிறப்பாக இதை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார்..
ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒரு விருப்பத்தை படத்தில் இறுதி கட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்.

நாங்கள் எதிர்பார்த்த அனைத்து இடங்களிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து படத்தின் கதாநாயகி பேசுவையில் மக்கள் மத்தியில் நின்ற வரவேற்பு கிடைத்திருக்கிறது மதுரை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என கூற
இயக்குனர் பேசுகையில் படத்தை இயக்கும்போது இருந்த நம்பிக்கையை விட படம் வெளியிடப்பட்டது பிறகு இடத்திருக்கக்கூடிய நம்பிக்கை
ஒரு தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கக்கூடிய நபர்கள் போன்று தான் எங்களது குழுவினருக்கும் இருந்தது ஆனால் படம் வெளியிட்ட பிறகு ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மக்கள் கொடுக்கக்கூடிய ஆதரவை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு திரையரங்குகளிலும் இருந்து நல்ல விமர்சனங்கள் வர விருப்பம் கிடைப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி.
கோவை திருப்பூர் சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ட்ரலில் தற்போது இன்று மதுரையில் வந்து உங்களையெல்லாம் சந்திப்பது மகிழ்ச்சி.
திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான் இது
கதாநாயகன் பேசுகையில் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது
நிறைய கதைகள் இருக்கின்றதா ஒவ்வொரு கதைக்கும் கதையின் ஆழத்தை பொறுத்துதான் யாரை கதையின் நாயகனாக முடிவு செய்யும் வேண்டுமென்பது கதை தான் முடிவு செய்யும் என்னிடம் 11 கதைகள் இருக்கின்றன.
நடிக்க வேண்டும் என்கின்ற ஆசைப்பட்டதன் சினிமா துறையில் வந்த நான் தற்போது இயக்கியிருக்கின்றேன்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவன் தான் நான்
மதுரையை நான் எப்போதும் ஒரே மாதிரியாக தான் பார்க்கின்றேன் அன்பும் பாசமும் மாறவில்லை அண்ணே என்றவுடன் பாசமாக கட்டி அணைப்பது முதல் சினிமாவை கொண்டாட கூடிய ஒரு ஊராக தற்போது வரை மதுரை இருக்கத்தான் செய்கிறது.
உள்ளதை உள்ளபடியே சொல்லக்கூடிய ரசிகர்கள் இருப்பதை நம்ம மதுரையில் தான்
நிச்சயமாக வரும் காலங்களில் மதுரையை கதைக்களமாக வைத்து ஒரு திரைப்படம் ஒரு விளையாட்டை சம்பந்தமாக வைத்து தயார் செய்து வருகிறோம்
1980 களில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்
அழகர் தான் எங்கள் படத்தை வெற்றி அடைய செய்திருக்கிறார் காரணம் சித்திரைத் திருவிழாவின் போது பக்தர்களுக்கு விசிறிகள் கொடுத்து எங்கள் படத்தை விளம்பரம் செய்தோம்
சினிமாத்துறைக்கு யார் வந்தாலும் வரவேற்கத்தக்கது தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் வரலாம்
மதுரை அரசியல் களமாக எம்ஜிஆர் காலகட்டத்தில் இருந்து மாறிவிட்டது எனவே தமிழக வெற்றிக்கழகம் மாநாடு மதுரையில் நடத்தப்படுவதும் மகிழ்ச்சி தான் என்றார்
இந்த நிலையில் திரையரங்கின் மேலாளர் பேசுகையில்
வார இறுதி நாட்களாக இருந்தாலும் இந்த திருடர் படத்திற்கு ஏராளமான சினிமா ரசிகர்களும் குடும்பத்தினரும் வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்றார்


