பாபநாசத்தில் செல்வமகா காளியம்மன் ஆலய, 20-ஆம் ஆண்டு காளி திருநடன திருவிழா..
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் காளி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் 20-ஆம் ஆண்டு, கொடியேற்றத்துடன் காளியம்மன் திருநடன திருவிழா தொடங்கியது.
நாள்தோறும் அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காளியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீதிகளில் நடனம் ஆடி வந்த காளியம்மனை அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் அமர வைத்து பழங்கள், இளநீர், மாவிளக்கு வைத்து தீபாராதனையை காண்பித்து வழிபட்டனர்.
இதில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காளி ஆட்டத்தை பார்த்தனர்.


