in

சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

 

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று சிதம்பரத்தில் தங்கி இருந்தார். சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்எல்ஏக்கள் பாண்டியன் (சிதம்பரம்), அருண்மொழித்தேவன் (புவனகிரி) ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அ.ம.மு.க.,வி.சி.க., பா.ம.க., காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1000 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது.

கட்சியில் இணைந்துள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது கட்சியில் இணைந்தீர்களோ அப்போதே நீங்களும் எங்களில் ஒருவர்தான். அதிமுகவில் நீங்கள் இணைந்தது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அதிமுக என்ற இந்த இயக்கம் மக்களுக்காக பாடுபடுகின்ற இயக்கம்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்து, புரட்சித்தலைவி அம்மா கட்டிக்காத்த இயக்கம். பொன்விழா கண்ட இந்த கட்சி தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இயக்கத்திலே நீங்கள் சேர்ந்து எங்களை பெருமைப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிது. கட்சியில் இணைந்த உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன் என பேசினார்.

What do you think?

சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு