கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீர்காழி சோதியக்குடியில் கலைஞர் திருஉருவச்சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். பொது மக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட நுழைவு எல்லையான கொள்ளிடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சோதியகுடியில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவ வெங்கல சிலையை திறந்து வைத்தார். 60 அடி கொடிகம்பத்தில் திமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இன் நிகழ்வில் அமைச்சர்கள் சிவ.வி.மெய்ய நாதன்,KN.நேரு, MRK.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.மாவட்ட திமுக வின் சார்பில் வெள்ளி செங்கோலை நினைவு பரிசாக வழங்கினர்.அதனை தொடர்ந்து சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்தார்.

மேலும் மாலை செம்பதனிருப்பு பகுதியில் கலைஞர் சிலையையும், மயிலாடுதுறையில் ரோடு ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திக்கும் தமிழக முதல்வர் நாளை ஏவிசி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடந்து முடிந்த திட்டபணிகளை தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்க உள்ளார்.


