in

பா. ரஞ்சித் உட்பட நான்கு பேர்மேல் போலிஸ்சார் வழக்கு பதிவு


Watch – YouTube Click

பா. ரஞ்சித் உட்பட நான்கு பேர்மேல் போலிஸ்சார் வழக்கு பதிவு

 

நீளம் ப்ரொடக்ஷன் சார்பில் பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்பட த்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணிஅருகே உள்ள கடற்கரை பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சண்டை பயிற்சியாளராக இந்த படத்தில் பணி புரிந்தார்.

படப்பிடிப்பின் போது காரில் சாகசம் செய்வது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மோகன்ராஜ் இருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது.

அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்த போதும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் சண்டை பயிற்சியாளர் வினோத் மற்றும் நான்கு பேர் மீது கவன குறைவு மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் படைப்பிடிப்பு நடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போயிருக்க வேண்டியது வனிதா விஜயகுமார்

பிரபல மாடல் அழகி ஏன் தற்கொலை செய்து கொண்டார்…. சிக்கிய கடிதம்