பா. ரஞ்சித்தின் படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர்… உயிரை குடிக்கும் காட்சி படத்திற்கு தேவையா?
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டுவம்” படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும் நடிகர் ஆர்யா வில்லனாகவும் நடிக்க இவர்களுடன் அசோக் செல்வன், பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கடந்த பத்தாம் தேதி நாகப்பட்டினம் கீழியூர் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் Stunt மாஸ்டராக பணியாற்றி வந்தார் , சண்டைக் காட்சி படமாக்கும் போது, கார் ஒரு இடத்தில் வேகமாக மோதி பறக்க வேண்டும் அப்பொழுது தவறுதலாக காரில் இருந்த மோகன்ராஜ் உயிரிழந்தார்.
உடனடியாக அவரை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இது’ சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த காட்சி பதிவாக்கப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியானது கார் ஒரு மண் மேடு மீது மோதி சுழற்றி விழுகிறது ஆனால் காரில் இருந்து மோகன்ராஜ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மற்ற கலைஞர்கள் ஓடி சென்று ராஜு அண்ணா, ராஜு அண்ணா என கத்துகின்றன ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லை.
இந்த காட்சியை இணையத்தில் பார்த்த ஒருவர் இப்படிபட்ட காட்சி தேவையா இந்த காட்சியை சாலையில் எடுத்தால் வழக்கு பாயும் அப்போ இளம் தலைமுறைக்கு எதை சொல்கிறீர்கள் அவசியமான காட்சியை தாண்டி வன்முறையை திணிக்கிறீர்கள் Creative… வாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உயிரை கொன்று விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.


