in

மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்

 

காவிரியில் தண்ணீர் வந்தும், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குளங்களுக்கு தண்ணீர் வழங்காத நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் குட்டைகள் அமைந்துள்ளன. காவிரி நீர் வரும்போது கிளை வாய்க்கால்கள் வழியே இந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

இதற்கான வாய்க்கால்கள், பொதுப்பணி துறையின் நீர்வள ஆதாரத்துறை நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பிலும் உள்ளன. குளங்களுக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் தூர் வாறாத காரணத்தாலும், காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களான பழங்காவிரி, பட்டமங்கலம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காத காரணத்தாலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகின்றது. கொள்ளிடம் ஆற்றின் வழியே உபரி நீர் தொடர்ந்து கடலுக்குள் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தண்ணீர் அனைத்தும் வீணாக கடலுக்குள் சென்று சேர்கின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், தற்பொழுது தண்ணீரை சேமிக்காமல் வீணாக்குவதை கண்டித்தும் குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

குளங்களுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலத்துக்குடியில் அமைந்துள்ள குளத்தில் இறங்கி கண்டன ஆர்ப்பாடம் செய்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் முதலமைச்சராக வரும்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

What do you think?

பெற்றோரின் நினைவாய்… ஒரு பிரம்மாண்ட ஆலயம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் அவதி