எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தான ஆலோசனை கூட்டம்…
கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தான ஆலோசனை கூட்டம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 2026-க்கான தேர்தலை முன்னிட்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார சுற்று பயணத்தை வரும் 7-ஆம் தேதி துவங்குகிறார்.
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கு வரும் 12 மற்றும் 14- ஆம் தேதிகளில் வருகை புரியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடலூர் அதிமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து நெய்வேலி அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வரவேற்பு பதாகைகள், வரவேற்ப்பு வலைவுகள் மற்றும் சாலை நெடுகிலும் கட்சி கொடிகள் நட்டு வைத்து சிறப்பான வரவேற்பினை வழங்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


