in

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ஸ்ரீ ஐராவத விநாயகர், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா எடத்தெருவிலுள்ள ஸ்ரீ ஐராவத விநாயகர், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது, இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாங்கம், மாநகர தலைவர் பி எஸ் சங்கர், ஆலய நிர்வாகிகள் சுகுமார், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனிப்பெருந்தோ்த் திருவிழா கொடியேற்றம்

நிலத்தடிநீர் எடுப்பிற்கு வரிவிதிக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பானை நகல் எரிப்பு போராட்டம்.