அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி விண்ணப்பங்களின் விற்பனை தொடக்கம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று 2024-25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர்.T.அருட்செல்வி அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் வாயிலாக இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங்குவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு 2023-24-ம் ஆண்டு முதல் 2028 ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது.

இவற்றில் 22 பாடப்பிரிவுகள் முதுகலை வகுப்புகள், ஐந்து பாடப்பிரிவுகள் இளங்கலை வகுப்புகள், மேலும் இப்பாடப்பிரிவுகளுடன் 115 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது. விண்ணப்ப துவக்க விழாவில் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் முனைவர். T.அருட்செல்வி அவர்கள் இணையதளம் வாயிலாக விற்பனையைத் தொடங்கிவைத்தார்.
பல்வேறு மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டனர். விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் R.S. குமார் அவர்கள், கல்விசார் இயக்குனர் முனைவர் L.முல்லைநாதன், தொலைதூர மற்றும் இணையவழி கல்வி இயக்குனர் முனைவர். T.சீனிவாசன்,
இணை இயக்குனர் முனைவர். P.விஜயன், துணை இயக்குனர் முனைவர். M.சீனிவாசன், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி திரு.க.ரெத்தினசம்பத், மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அனைத்து விபரங்களையும் www.audde.in என்ற இணையதள முகவரியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


