சிவகங்கை கண்டதேவி ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆனி மாத தேரோட்டம்
கண்டதேவி ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவிலின் ஆனி மாத திருவிழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆனி மாத திருவிழா ஜூன் 17ஆம் தேதி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக ஜூன் 25ஆம் தேதி இன்று மாலை 5 மணி அளவில் தேரோட்டம் கண்ட தேவி ஊரணி நான்கு ரத வீதி சுற்றி வலம் வந்தது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


