in

குற்றவாளிகளை கைது செய்யாமல் அலை கழித்து வரும் காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு.

குற்றவாளிகளை கைது செய்யாமல் அலை கழித்து வரும் காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு.

 

பாலியல் தொந்தரவு, பணம்பரிப்பு சம்பவத்தில் நிர்வாண புகைப்படங்கள் இருப்பதாக கூறி மிரட்டி தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் உறவினர் மீது புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிதம்பரம் டிஎஸ்பி, டிஎன்ஏ ஆய்வு அறிக்கை எடுத்து வா என கூறி பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு.

தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய குடும்பப் பெண்ணை ஆடை இல்லாமல் புகைப்படங்கள் வீடியோ உள்ளது, என மிரட்டி பாலியல் தொந்தரவு செய்தும், அவரிடம் இருந்து மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் மிரட்டி வாங்கிய நிதி நிறுவன உரிமையாளரின் உறவினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் டிஎன்ஏ அறிக்கை எடுத்து வர சொல்லி டிஎஸ்பி கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார். பத்து நாட்கள் கடந்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலைய முன்பு சாலை நடுவே கணவனுடன் பெண் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு.

சிதம்பரம் அருகே மஞ்சக்குழி கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி கலைச்செல்வி, வயது 36. இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள வாழ்க வளமுடன் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் ஓராண்டுக்கு மேல் பணிபுரிந்து வந்ததாகவும் அதே நிறுவனத்தில் சதீஷ்குமார் என்பவர் பணம் வசூல் செய்யும் முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கலைச்செல்வியை சதீஷ்குமார் வேலை நேரம் முடிந்த பிறகும் தொடர்ந்து இரவு நேரங்களில் தொந்தரவு செய்து பணியாற்ற வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரின் செயல் கலைச்செல்விக்கு பிடிக்காததால் பணியை விட்டு நின்றுள்ளார். அதன் பின்னர் சதீஷ்குமார் தொடர்ந்து கலைச்செல்விக்கு இரவு நேரம் போன் செய்து வேலைக்கு வர வேண்டும் அப்படி இல்லையென்றால் உனக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் உன்னுடைய சான்றிதழ்கள் கொடுக்க முடியாது எனவும், என்னிடம் வந்து படுத்தால் உன்னுடைய சம்பளம் மற்றும் சான்றிதழ்கள் வழங்குவேன் எனவும் தொடர்ந்து, பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும் தனியார் நிதி நிறுவனத்தில் பெண்கள் குழுவில் வழங்கிய பணத்தை கையாடல் செய்துள்ளதாக உன் மீது புகார் அளிப்பேன் என மிரட்டி உள்ளார். குறிப்பாக கலைச்செல்வி புகைப்படம் மற்றும் அங்கு பணிபுரியும் சிலரின் புகைப்படங்கள் ஆடை இல்லாமல் தன்னிடம் இருப்பதாகவும் அதனை யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்டு கலைச்செல்வியிடம் சுமார் மூன்று லட்சத்திற்கு மேலாக யுபிஐ பணப்பரிமாற்ற செயலி மூலமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் நேரில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிதம்பரம் டிஎஸ்பி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் என அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், நாள்தோறும் காவல் நிலையத்திற்கு வந்தால் நாளை வா, மறுநாள் வா எனவும், அதிகாரி இல்லை என போலீசார் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிதம்பரம் டி.எஸ்.பி. பாதிக்கப்பட்ட பெண்ணான கலைச்செல்வி மற்றும் எதிர் தரப்பு நபரான சதீஷ்குமாரை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய போது சதீஷ்குமார் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து, டி.என்.ஏ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பேசி சென்றதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி பாதிக்கப்பட்ட பெண் அலுவலகத்திற்கு வரும்போது, டிஎன்ஏ பரிசோதனை எடுத்துவிட்டு வா என கூறியதாக வேதனை தெரிவிக்கும் பெண், பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர் சதீஷ்குமாருக்கு உறுதுணையாக இருப்பதால், சிதம்பரம் டிஎஸ்பி முதல் போலீசார் அனைவரும் பாதிக்கப்பட்ட எனக்கு நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்து வருவதாகவும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து என்னை போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யாமல் அலை கழித்து வருவதால் ஒரு கட்டத்தில் இறந்து போய்விடலாம் என்ற எண்ணத்திற்கும் வந்ததாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்போது சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எனது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம்

14 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு, வீட்டு வேலை செய்த வடமாநில பெண் கைது.