மீண்டும் தலை தூக்கும், மாடு முட்டு சம்பவம் – கோயம்பேட்டில் அதிர்ச்சி.
கோயம்பேட்டில் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றி திரியும் எருமை மாடுகளால் பரபரப்பு. சாலை ஓரத்தில் நின்றிருந்த நான்கு பேரை முட்டி தள்ளிவிட்டு தலை தெரிக்க ஓடும் மாடுகளால் பதற்றம்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாடு முட்டி முதியவர்கள் உயிரிழப்பு, குழந்தைகள் உயிர் என அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி ரணம் கூட மறையாத சூழலில் மீண்டும் சென்னை கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றி திரியும் சூழல் ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் வியாபாரிகள், வாகன ஓட்டிகளை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது.

குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் சாலையில் இங்கும் அங்கும் தலை தெரிக்க ஓடி சுற்றி திரிகிறது. இதனை உரிமையாளர்கள் கட்டி போடாமல் சாலையில் விடுவதால் விபத்துக்கள், உயிரிழப்புகள், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த நான்கு நபர்களை எருமை மாடுகள் முட்டி தள்ளிவிட்டு ஓடக்கூடிய காட்சிகள் காண்பவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.


