in

சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

 

சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் சாலையில் திடீர் மறியல், காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அலுவலக பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் கடும் அவதி.

சிதம்பரம் நகர பகுதிகளை ஒட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன குறிப்பாக லால்புரம் ஊராட்சி, சி. தண்டீஸ்வர நல்லூர் ஊராட்சி, கொத்தங்குடி தோப்பு ஊராட்சி உள்ள நிலையில் இந்த மூன்று ஊராட்சிகளையும் சிதம்பரம் நகராட்சியோடு இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாங்கண்ணி மேடு கிராம மக்கள் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 நிமிடங்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில் காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

மேலும் இது குறித்த பகுதி கிராம மக்கள் குறுகையில் எங்கள் பகுதி கிராம பகுதியாக இருப்பதால் சிதம்பரம் நகராட்சியோடு இணைத்தால் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஏழை எளிய மக்கள் நாங்கள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் எனவும் 100 நாள் வேலையை நாங்கள் இழக்க நேரிடும் எனவும் எங்கள் குடும்பங்களை எப்படி காப்பாற்ற முடியாது ஆகையால் பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தை சிதம்பரம் நகராட்சியோடு இணைக்க கூடாது என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சிதம்பரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மரிலை கைவிட வைத்தனர் மேலும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பெயரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டார்