in

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

 

சீர்காழியில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய மயிலாடுதுறை எம்.பி, எம்.எல்.ஏ.

காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காந்தி பூங்காவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு (பிரியாணி) வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ராஜ்குமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை எம்பி சுதா கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு பிரியாணி பொட்டலங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன், மாவட்ட துணைத் தலைவர் அன்பு, மாவட்ட செயலாளர் பானு சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

மீண்டும் ரீ டெலிகாஸ்ட்…டாகும் விஜய் டிவி சீரியல்

அறுபடை கோவில்களில் இருந்து வேல்கள் சிறப்பு பூஜை