ட்ரோப் அவுட்..ஆன ‘வாடிவாசல்’
‘வாடிவாசல்’ திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரை வைத்து சென்ற வருடம்அறிவிக்கப்பட்டது.
இந்த படம் சிஎஸ் செல்லப்பாவின் 1940 நாவலை அடிப்படையாகக் கொண்டது, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டான காளை அடக்கும் ஜல்லிக்கட்டை பற்றியது.
வி கிரியேஷன்ஸ் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க காளைகளுடன் சூர்யா பயிற்சி செய்யும் வீடியோ 2022 இல் வெளியிடப்பட்டு, எதிர்பார்ப்பை அதிகரித்தது.
விடுதலை ஷூட்டிங்..கில் பிஸி..யாக வெற்றி மாறன் இருந்ததால் சிறிது காலம் ஒத்திவைக்க பட்டது. சமீபத்தில் தான் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது, ஜி.வி.பிரகாஷின் இசைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தாணு கூறியிருந்தார்.
இந்த திட்டம் கோடையில் தொடங்கும் என்றும் வெற்றிமாறன் கூறியிருந்தார், ஆனால் அதன் பின்னர் எந்த update..டும் இல்லை ஆனால் புதிய தகவலாக வாடிவாசல் ட்ரோப்…ஆனதாக கூறபடுகிறது.
இருப்பினும், இந்த வதந்தியை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. சூர்யாவும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.
அடுத்த மாதம் ஹைதராபாத்தில் சூட்டிங் தொடங்கவிருக்கிறது வெற்றிமாறனும் நடிகர் தனுஷை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகி விட்டார். வாடிவாசல் கைவிடப்பட்டதை கேள்வி பட்டு ரசிகர்கள் வாடி போய்விட்டனர்.


