சரிகமப நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் தேவயானி மகள்
ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஜூனியர் சீசன் 4 சென்ற வாரம் முடிவடைந்த நிலையில் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆடிஷன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க திறமையாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கபடுகிறது.
நல்ல குரல் வளத்தோடு கனவோடு வருபவர்களுக்கு சரிகம சரியான சாய்ஸ் ஆடிஷனின் தேவயானி மகள் கலந்து கொண்டு மயில் போல என்ற பாடலை பாடியிருக்கிறார்.
நடுவர்கள் அவரை செலக்ட் செய்த பிறகுதான் அவர் தேவயானியின் மூத்த மகள் இனியா என்று தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து நடுவர்கள் தேவயானிடம் கேட்டபோது இந்த மேடை அனைவருக்கும் எளிதில் கிடைக்காது என் மகள் அவளது சொந்த முயற்சியால் மேலே வரவேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை அதற்காக தான் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூறினேன் என்றார்.


