சிங்கவரம் அரங்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா
சிங்கவரம் அரங்கநாதர் கோயில் இன்று காலையில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் திமுக முன்னாள் அமைச்சர் செஞ்சிமஸ்தான் எம்.எல்.ஏ, அதிமுக முன்னாள் எம்பி சேவல் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்……

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல்லவர் கால குடவரை கோயிலான அருள்மிகு அரங்கநாதர் ஆலயம் சிங்கவரம் மலை மீது அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த மே 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு அன்று காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் எதிரில் உள்ள கொடி மரத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் நாள் விழாவில் சிம்ம வாகனத்திலும் 3ஆம் நாள் விழாவில் அனுமந்த வாகனத்திலும் 4ஆம் நாள் விழாவில் சேஷ வாகனத்திலும் 5ஆம் நாள் திருவிழாவில் கருட சேவையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர்ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டதேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து திருத்தேருக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் திமுக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.,அதிமுக முன்னாள் எம்பி சேவல் ஏழுமலை ஆகியோர்,கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், கோவில் உதவி ஆணையர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், கோடீஸ்வரன்,இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் சத்யா சரவணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்கள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த விளைபொருட்களை தேரின் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.


