in

வைகாசி ரோகிணி முன்னிட்டு அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் கருட சேவை

வைகாசி ரோகிணி முன்னிட்டு அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில் கருட சேவை

 

வைகாசி ரோகிணி யை முன்னிட்டு அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவிலில் கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில் சுமாா் 800 வருடங்கள் பழமையான திருக்கோவிலாகும்.

இத் திருக்கோவிலில் மூலவா் ஸ்ரீவேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், மூல விமானத்தில் தேவி பூதேவி சமேத ஸ்ரீஅழகிய மன்னாாரும் உற்சவராக ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபாலாா் என மூன்று நிலைகளில் அருள்பாலித்து வருகின்றனா்.

தற்போது வைகானச முறைப்படி திருக்கோயில் பூஜைகள் நடைபெறுகின்றது. வைகாசி ரோகிணி யில் மூலவா் பிரதிஷ்டை நடைபெற்றது. இந்த பிரதிஷ்டா தினத்தில் மூலவருக்கு காலையில் நவகலசங்கள் வைத்தும் மஞ்சள், வாசனைபொடி பால் தயிா் பஞ்சாமிருதம் தேன் இளநீா் சந்தணம் என பல்வேறு பொருட்களால் மூலவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவேநாராயணர், உற்சவமூா்த்திகள் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபாலசுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாா் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

வருடத்தில் 3 முறை மட்டுமே இவ்வாறு மூலவா் உற்சவா் சோ்த்தி திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இரவில் கருடசேவை புறப்பாடு நடைபெற்றது.

உற்சவமூா்த்தி ஸ்ரீ ராஜகோபாலாா் கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளினாா். தமிழ் மறையான நாலாயில திவ்யபிரபந்தத்தில் திருவாய்மொழி பாடப்பட்டது.

பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டதும் குடைவரை பெருவாயிலில் பக்தா்களுக்கு தாிசனம் தந்த ராஜகோபாலருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. இரு குடைகள் பூட்டப்பட்டதும் பக்தா்களின் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் கருடசேவை புறப்பாடு நடைபெற்றது.

சிறுவா்கள் பஜனை பாடல்கள் ஆடிப்பாடியபடி கருட வானகம் பின் சென்றனா். ஏற்பாடுகளைகோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா

மல்லியம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா