in

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா

 

குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் வந்து தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.ஆலயத்தின் ஆண்டு வைகாசி மாத தீமிதி உற்சவம் கடந்த 12ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தினம்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன 15 ஆம் நாள் உற்சவமாக தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக காவிரி தீர்த்தப்படித்துறையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர் ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர். இரவு திரௌபதி அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பிரித்திங்கரா தேவி ஆலயம் வைகாசி மாத அமாவாசை நிகும்பலா யாகம்

உலக மீட்பர் ஆலய 12ஆம் ஆண்டு திருவிழா அலங்கார தேர்பவனி