இரண்டு படத்தில் இருந்து சுட்ட கதையா ThugLife…
தக் லைஃப் படத்தின் டிரெய்லர் இணையத்தில், குறிப்பாக கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது – மீண்டும் இணைந்த இரண்டு சினிமா ஜாம்பவான்களால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பான்-இந்திய Movie…யான ThugLife ஜூன் 5, அன்று வெளியாகிறது, 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓட கூடிய படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
த்ரிஷா, சிலம்பரசன் (சிம்பு), நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்த தக் லைஃப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் Movies தயாரித்துள்ளன.
இசை ஏ.ஆர். ரஹ்மான் மணிரத்தினம் எப்பொழுதும் எதார்த்தமான கதைகளை அழகாக சொல்வதில் வல்லவர்.
மேலும் தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் தன் வாழ்க்கையில் நடக்காத விஷயங்களை மட்டுமே தன் படத்தில் சொல்லி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஒரு பக்கம் ரசிகர்களின் ஆவல் அதிகரித்தாலும் மறுபக்கம் ThugLife…ஐ ரோல் செய்து பங்கம் பண்ணி வருகின்றனர். சிம்புவின் செக்க சிவந்த வானம் மற்றும் கமலின் விக்ரம் படத்தை காப்பி அடித்து தக் லைஃப் படத்தை மணிரத்தினம் எடுத்திருப்பதாக கலாய்க்கின்றனர்.
சொத்துக்காக தந்தை மகனை கொலை செய்து விடுகிறார் அமரன் என்ற சிறுவனை காப்பாற்றி சக்திவேல் வளர்க்கிறார். ஒரு மாபியா கும்பலுடன் சக்திவேல் மற்றும் காவல் துறையினருடன் துப்பாக்கி சண்டை நடக்கிறது அப்போது சக்திவேல் மீது கொலை முயற்சி நடக்கிறது அதற்கு காரணம் அமரன் தான் ஏன சந்தேகப்படுகிறார்.
தனது சகோதரன் மற்றும் தன்னை காட்டிக்கொடுத்த வளர்ப்பு மகனை பழிவாங்குவதே Thuglife Story ஒரு சிலர் பாக்கியலட்சுமி சீரியலை சுட்டிருபதாகவும் கூறுகின்றனர் எது எப்படியே ThugLife படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.


