in

எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 71 கிலோ பிரம்மாண்ட கேக்

எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 71 கிலோ பிரம்மாண்ட கேக்

 

எடப்பாடி பழனிச்சாமி தனது பிறந்த நாளை கொண்டாட தவிர்த்து உத்தரவிட்ட நிலையில், 71 கிலோ பிரம்மாண்ட கேக் தயாரித்து , முன்னாள் அதிமுக அமைச்சர் கேக் வெட்டி கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில், மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலை அமைக்கப்பட்ட வளாகத்தில், முன்னாள் அதிமுக அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ – வுமான ஆர்.பி. உதயகுமார்,
எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவரது உருவம் பதித்த படத்துடன், 71 கிலோ பிரம்மாண்ட கேக் தயாரித்து, அதில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி பெறுவோம் என்ற சூளுரை தெரிவித்த வாசகங்களுடன், போரில் ராணுவ வீரர்கள் வெற்றி பெற வேண்டியும், அவர்கள் நலமுடன் இருக்க வலியுறுத்தி வாசகங்களும் பிரமாண்ட கேக்கில், எழுத்து வடிவில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த பிரம்மாண்ட கேக்கை ஆர்.பி. உதயகுமார் கத்தியால் வெட்டி, எடப்பாடி பழனிச்சாமி நீடூடி வாழ்க என்ற கோஷத்துடன், கேக்கை வெட்டி தனது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஊட்டி விட்டும் மகிழ்ந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தனது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள்மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவட்டை மட்டுமே நடத்தக்கூறியுள்ள நிலையில், அவரது பிறந்த நாளை பிரம்மாண்ட கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் ஆர்பி உதயகுமார் தனது நிர்வாகிகளுடன் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, அவ்விடத்தில் மேற்பட்ட கிராம மக்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானமும் ஆர்.பி. உதயகுமார் வழங்கி மகிழ்ந்தார்.

What do you think?

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ரிஷப வாகனம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்