in

எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு வாக்கு கிடைக்காது


Watch – YouTube Click

எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவர்களுக்கு வாக்கு கிடைக்காது

 

வரும் 19ஆம் தேதி தமிழகம் புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர், இந்த நிலையில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.

வரக்கூடிய இந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது எப்பொழுதும் நாம் தொடர்ந்து சந்திக்கக்கூடிய தேர்தல்களைப் போன்ற தேர்தல் இல்லை. இது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தலாகும். இந்த தேர்தலில் நிச்சயமாக மறுபடியும் பாஜக ஆட்சிக்கு வராது, ஆனால் அப்படி ஒரு விபத்து நேர்ந்தது என்றால் இதுதான் இந்தியாவோட கடைசி தேர்தல் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் சர்வாதிகாரம் மட்டும்தான் மிஞ்சி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதனால் இந்த நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண சாமானிய மக்களுடைய உரிமைகளை, மீனவர்களுடைய உரிமைகள் விவசாய மக்களுடைய உரிமைகள் இங்கு இருக்கக்கூடிய சகோதரிகளுடைய உரிமைகள் இதையெல்லாம் மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுல வெள்ளம் வந்த போது வரவில்லை மிகப்பெரிய பாதிப்பு தூத்துக்குடியிலும் திருநெல்வேலி பகுதியிலும் ஏற்பட்டது – இவர்கள் வந்து எட்டி கூட பார்க்க வில்லை.

மத்திய நிதியமைச்சரை இங்கு அனுப்பினாரு ஆனால் நிதியாக ஒத்த ரூபாய் கூட தமிழகத்திற்கு நிதி வரவில்லை . அந்த ஒன்றிய நிதி அமைச்சரை கூட்டிட்டு போய் எல்லா இடங்களையும் காட்டியது நம்முடைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. அவர்கள் மனம் இறங்கி காசு அனுப்புவாங்க நிவாரணம் தருவார்கள் என்று நினைத்தால் ஒன்றும் வரவில்லை.

இப்போது தேர்தல் வந்து விட்டது. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை மூணு நாளைக்கு ஒரு தடவை பிரதமர் தமிழகம் வருகிறார் வாரத்திற்கு 8 நாள் இருந்தாலும் 8 நாளும் வருவார் எத்தனை தடவை வந்தாலும் இங்கு ஒன்னும் ஓட்டு தேராது. இருந்தாலும் மூன்றாவது இடத்திற்காக முயற்சி பண்ணுவோம் என்பதற்காக பிரதமர் வந்து கொண்டிருக்கிறார்

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக நியமித்திருக்கக்கூடிய அண்ணாமலை தமிழ் மக்களுடைய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். வாய் துடுக்கோடு துணிச்சலோடு பேசுகிறார்.

தமிழ்நாடு மீதும் இவர்களுக்கு மரியாதை கிடையாது தமிழர்கள் மீதும் மரியாதை அக்கறை கிடையாது. நம்மிடம் இருந்து ஒரு ரூபாய் வரியாக வாங்கிட்டு போனாங்கன்னா திருப்பி கொடுக்கறது 25, 26 பைசா மட்டுமே ஆனா உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசாங்கம் கொடுக்கிறது ஒரு ரூபாய்க்கு ரெண்டு ரூபா ரெண்டு பைசா. மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை தமிழர்களை வஞ்சித்து கொண்டிருக்க கூடிய அரசாக இருக்கிறது.

தேர்தல் பத்திர ஊழல் குறித்து கேள்வி கேட்டால் அவர்கள் இன்னொரு பிரச்சனையை தான் பேசுவார்களே தவிர கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் கிடையாது உலகத்திலேயே பெரிய ஊழல் என தேர்தல் பத்திர ஊழல் பற்றி சுப்ரீம் கோர்ட் டே சொல்கிறது.

இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆனால் அதைப்பற்றி கேள்வி கேட்கிறோம் எப்படி வந்து இவ்வளவு பெரிய ஊழலை ஒரு சட்டம் போட்டு சட்டபூர்வமாக ஊழல் செய்ய கற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள் அவர்கள். ஊழல் செய்வது பற்றி உலகத்துக்கே கத்துக் கொடுக்கக்கூடியவர்கள் பிஜேபி காரர்கள், பிரதமர் மோடி பேசும் பொழுது எனது கரங்கள் சுத்தமானது என்பார். ஆனா மிகப்பெரிய ஊழலுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்தான்

தொழில் செய்யக்கூடியவர்களை , தொழில் அதிபர்களை மிரட்டி வாங்கிய பணம் இப்படி தான் தேர்தல் பத்திரங்களாக பிஜேபி வாங்கி இருக்கிறது. பல்வேறு வழக்குகள் இருக்கக்கூடிய தலைவர்கள் பாஜக விற்கு வந்து விட்டால் அவர்கள் மீது உள்ள வழக்குகள் காணாமல் போய்விடும். எதிர் கட்சிகளை சார்ந்த இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். டெல்லியில் இருக்கக்கூடிய துணை முதலமைச்சர் சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருக்கிறார்

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை எல்லாம் முடக்கி அவர்களை செலவு செய்ய விடாமல் தடுக்கின்றனர். இதன் மூலம் தேர்தலில் அவர்களை வெற்றி பெற்று விடலாம் என்று தவறான கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். மோடி பத்து வருஷம் ஆட்சில இருக்காரு. இன்னைக்கு திடீர்னு கட்சத்தீவு மீது அக்கறை வந்து விட்டது.

இப்பொழுது நம்முடைய வட இந்தியாவில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளும் இவர்களைப் பற்றி புரிந்து கொண்டு இருக்கிறார்கள். நாட்டில் படித்த இளைஞர்களுக்கு .. வேலை கிடையாது கிட்டத்தட்ட கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவு வேலை இல்லா திண்டாட்டம் மிக மோசமாக இருக்கக்கூடிய சூழல் இன்று உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார் என பேசிய கனிமொழி இன்றைக்கு விவசாயிகள் டெல்லியில் அவர்கள் உரிமைக்காக போராடி வருகிறார்கள் அடிப்படை ஆதார விலை வேண்டுமென்று அவர்கள் போராடும் நிலையில் அவர்கள தீவிரவாதி மாதிரி டெல்லிக்குள்ள விட மாட்டேங்குறாங்க இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி தொடர கூடாது, இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 68 ஆயிரம் கோடிக்கு மேல கடன் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். சாதரண மக்களுக்கு அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்

நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலையில் நம்முடைய முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதி படி கேஸ் சிலிண்டர் விலை ரூ. 500 ரூபாய்க்கு கிடைக்கும் பெட்ரோல் விலை 75 ரூபாய் க்கும் டீசல் உடைய விலை 65 ரூபாயாகவும் குறைக்கப்படும் 100 நாள் வேலை திட்டம் 150 நாள் வேலை யாக மாற்றப் படும். அதே போல சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் படி ராகுல் காந்திபெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார் அதுவும் கிடைக்கும் நம்முடைய முதலமைச்சர் தரக்கூடிய 1000 ரூபாய் இல்லாமல் மேலும் ஒரு லட்ச ரூபாய் பெண்களுக்கு கிடைக்கும் என்று பேசினார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகள் இருக்காது

கயிலை ராஜனுக்கு ஆதரவு கேட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்