செஞ்சியில் 79-வது சுதந்திர தின விழா
செஞ்சியில் 79-வது சுதந்திர தின விழா – செஞ்சி பேரூராட்சி அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்…….
நாட்டின்79வது சுதந்திர தின நாள் திருவிழா இன்று நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் மற்றும் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79 -வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், செயல் அலுவலர் கலையரசி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சரும், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் .
தொடர்ந்து சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சிறப்புரையாற்றி பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி,நகர செயலாளர் கார்த்திக், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் திலகவதி, மாணிக்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…


