திட்டக்குடி அருகே வீட்டில் பீரோவை திறந்து 5 சவரன் நகை வெள்ளி கொலுசு திருட்டு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார் இவர் வேப்பூர் அருகே தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றார் .
இவர் வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்றுள்ளார் இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவின் அருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதிலிருந்த நான்கு சவரன் தாலிக்கொடி அரை சவரன் தோடு அரை சவரன் மோதிரம் உள்ளிட்ட ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிக் கொண்டு பீரோவை பூட்டிவிட்டு அதன் சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு அந்த வீட்டின் அருகில் இருந்த தனபால் என்பவரது வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இன்று காலை பீரோவை திறந்து பார்த்த அருள்குமார் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
