பேராவூர் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு 35 ஆம் ஆண்டு ஆடி அக்னி உற்சவ பெருவிழா
பேராவூர் ஸ்ரீ மகா காளியம்மனுக்கு 35 ஆம் ஆண்டு ஆடி அக்னி உற்சவ பெருவிழா பால்குடம் ஊர்வலம்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பேராவூர் கிராமம் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய 35 ஆம் ஆண்டு ஆடி அக்னி உற்சவம் பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து 108 பெண்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் தொடங்கியது.
தொடர்ந்து கிராம வீதி வழியாக ஊர்வலம் வந்து ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தை அடைந்தனர். மேலும் மூலவர் ஸ்ரீ மகாகாளி அம்மனுக்கு 108 பெண்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


