நாமக்கல்லை அடுத்த அனிச்சம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ நிதி தீர்த்தருக்கு -15 ஆண்டு குரு பூஜை விழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் அனிச்சம்பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ நிதி தீர்த்தர் மூலபிருந்தாவனம். இங்கு அவரின் 15-ம் ஆண்டு குரு பூஜை விழா 2-ம் நாளான நேற்று காலை துவங்கி இரவு வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கர்நாடக மாநிலம் பெங்களூர் பாலே காரமடத்தின் பிடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ராமப் பிரிய தீர்த்தர் கலந்து கொண்டு – ஸ்ரீ நிதி தீர்த்தரின் 15ம் ஆண்டு குருபூஜை விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தார்.
அப்போது அங்குள்ள ஸ்ரீ ஆஞ்சியர், ஸ்ரீ லட்சுமிநரசிம்மர், ஸ்ரீ நிதி தீர்த்தர் உற்சவர், ஸ்ரீ ராகவேந்திர், ஸ்ரீ நிதிதீர் முலபிருத்தாவனம்.உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தார்.
பின்னர் உற்சவ ஸ்ரீ நிதி தீர்தர் திருக்கோவிலை சிறிய தேரில் சுற்றி வந்த பின் மூலவருக்கு மகா மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.