in

150 சிவனடியார்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணம்

150 சிவனடியார்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணம்

 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு 70 வள்ளி கும்மி ஆட்ட கலைஞர்கள் உட்பட 150 சிவனடியார்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணம்: கடல் கடந்து வள்ளி கும்மி கலையை பரப்ப முயற்சி.

உலக சிவனடியார்கள் திரு கூட்டத்தின் சார்பில் தமிழகம் முழுவதிலிருந்து 150 சிவனடியார்கள் இலங்கையில் (ஈழநாட்டு) தேவாரப் பாடல் பெற்ற திருத்தல யாத்திரை புறப்பட்டனர். நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்படும் சிவன் அடியார்கள் காங்கேசன் துறைமுகத்தை அடைகின்றனர்.

அங்கிருந்து மன்னார் திருக்கேதிச்சரம் திருக்கோவில், நாவற்குடா சிவன் கோவில், மண்டூர் கந்தசாமி திருக்கோவில், கங்காதீஸ்வரர் கடற்கரை சிவன் கோவில், பாலசேன பெரியசாமி சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களை தரிசனம் செய்கின்றனர்.

இலங்கை சிவனடியார்களுடன் சிவ தொண்டு மற்றும் சிவபணிகளிலும் கலந்து கொள்கின்றனர். அங்கு பயிற்சி பெற்ற சிவனடியார்கள் மங்கை வள்ளி கும்மி நடனம் அரங்கேற்றம் செய்கின்றனர்.

மேலும் கடல் கடந்து வள்ளி கும்மி நடனத்தை அங்குள்ளோர்களுக்கு கற்றுக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

What do you think?

 சம்பா சாகுபடிக்காக கீழனையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

பழனி அருணகிரிநாதர் கோவிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா