ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 125 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூரில் இருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான குட்காவை கொரியரில் வரவழைத்து கடலூரில் விற்பனையில் ஈடுபட்ட இதுவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தீர்த்தனகிரி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம்.
இவர் முன்பு சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து கொரியரில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார் உள்ளிட்டோர் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 125 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கைப்பற்றிய போலீசார், மினிவேன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்த குட்கா வழக்கில் புவனகிரி அடுத்த தீர்த்தனகிரி பகுதியைச் சார்ந்த பாலசுப்பிரமணியம், கொத்தட்டை பகுதியை சார்ந்த மணியரசன் என்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


